சென்னை கிண்டி அடுத்தா ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.இறந்த கல்லூரி மாணவி சத்யாவின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது