இளம் பெண் ஒருவரை ரயிலில் தள்ளிவிட்டு இளைஞர் படுகொலை செய்துள்ள சம்பவம் பரங்கி மலையில் அரங்கேறிய நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை செய்த இளைஞர் பெண்ணை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதில் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், சென்னை டி-நகர் தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சத்யா (வயது 20) என்பது தெரிய வந்துள்ளது.
இவர் தனது ஆண் நண்பருடன் ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது ஆண் நண்பரான சதீஷ் ஓடும் ரயில் முன்பாக சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில், கொலை நடந்த இடத்தில் தற்போது தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தலைமறைவாக இருக்கும் சதீஷை போலீஸ் தேடி வருகின்றது.