புதுடில்லி : கேரளா, மஹாராஷ்டிரா உட்பட நாடு முழுதும் பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இது பற்றி அங்குள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவுகளும் பிறப்பிக்கட்டுள்ளன. பல உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கேரளா மற்றும் மும்பையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெருநாய்களை கொல்வதும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளில் பொதுமக்களை தெருநாய்கள் கடித்தது மற்றும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த விபரங்களை இந்திய விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement