இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில், எட்டு குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட மொத்தம் ௧௮ பயணியர், நேற்று முன்தினம் ‘ஏசி’ பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த ஜூனில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி ௧,௭௦௦ பேருக்கும் மேல் உயிரிழந்தனர்.
நாட்டின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதில், சிந்து மாகாணத்தில் உள்ள தது மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
இங்கு வெள்ளத்தில் தப்பித்து நிவாரண முகாமில் தங்கியிருந்த 80க்கும் மேற்பட்டோர், கராச்சிக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற ‘ஏசி’ பஸ்சில் பயணித்தனர்.
அப்போது, ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து பலரை மீட்டனர். சிலர், ஜன்னல் வழியாக குதித்து தப்பினர்.
இருப்பினும், இந்த விபத்தில், எட்டு குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட ௧௮ பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளை துரிதப்படுத்திய சிந்து மாகாண முதல்வர் முரத் அலி ஷா, இது சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement