தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ள நிலையில்,
தரப்பு சற்று பலம் பெற்று விளங்குவதாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்க
தரப்பு பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. அதிமுக யார் கையில்? என்பதை இறுதியாக தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது.
இந்த இடத்தில் தொண்டர்கள் ஆதரவு என்று வெறுமனே வாய் வார்த்தையாக சொன்னால் பலனில்லை. கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு பட்டியலை, அவர்கள் கையெழுத்து போட்ட படிவங்களை சமர்பிக்க வேண்டும். அதாவது, அதிமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் யார் பக்கம் அதிகமாக இருக்கிறார்களோ?
அவர்களுக்கே கட்சி என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிடும். அப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தான் பொதுக்குழு உட்பட எம்.பிக்கள் வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தான் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடி காட்டி வருகிறார். இது எந்தளவிற்கு தேர்தல் ஆணையத்தின் முன்பு எடுபடும் என்று தெரியவில்லை.
எனவே தான் எடப்பாடி பக்கமிருக்கும் மாவட்ட செயலாளர்களை வளைக்க திட்டம் உருவாக்கியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக தெற்கை குறிவைத்து 12 மாவட்ட செயலாளர்களை தங்கள் வசம் ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக வைத்திலிங்கம் மூலம் ஓபிஎஸ் தூது அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெற்றி பெற்றால் திட்டத்தை விரிவுபடுத்தவும் தயாராக இருக்கின்றனராம்.