இலங்கை சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசி கொண்ட கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுங்க அதிகாரிகளுடன் அமைச்சகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடனை செலுத்தாத காரணத்தினால் சுமார் 79 கொள்கலன் கொண்ட அரிசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சுங்கத் திணைக்களத்தில் உள்ள 950 க்கும் அதிகமான கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளார்.
அந்தந்த கொள்கலன்களில் அரிசியை தவிர கருங்கா, மஞ்சள் போன்றவை கையிருப்பில் உள்ளதால் அவை முன்னுரிமைப் பட்டியலின்படி கொள்கலன்கள் விடுவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தண்டப்பணத்தை அறவிடாமல் கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான பத்திரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.