13/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சையில் 26,509 பேர் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலாக கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று மேலும் 2786 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,21,319 ஆக உள்ளது.  வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1.05% ஆக உள்ளது

தற்போது நாடு முழுவதும் 26,509 தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்  இறப்பு எண்ணிக்கை 5,28,847 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,557 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,65,963 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.76% ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,19,15,39,281 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 5,69,709 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.