இமாச்சலப்பிரதேசத்தில் நவ.12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்: அக். 17ல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்..டிச.8ல் வாக்கு எண்ணிக்கை.. தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

டெல்லி: இமாச்சலப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. அக்டோபர் 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். வேட்புமனுவை திரும்பபெற அக்டோபர் 29ம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும்.

மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு:

50 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெற்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று ஓட்டு பெற்றுவரும் நடவடிக்கைகளை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் 1.82 வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள்; 2.5 லட்சம் வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள். 2023 ஜனவரி 8ம் தேதி இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளில் 20 தொகுதிகள் தனி தொகுதிகள். 55.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.