இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச தேர்தல் தேதியுடன் குஜராத் பேரவை தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன் என்று முன்னாள் தலைமை ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காதது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார். இமாச்சலம் மற்றும் குஜராத் சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தான் முடிவடைகிறது. ஒரே நேரத்தில் முடிவடையும் சட்டமன்றங்களுக்கு ஏன் ஒரே நேரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்று எஸ்.ஒய்.குரேஷி கேள்வி எழுப்பியுள்ளார்.