டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் நவ.12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.