காதலியுடன் ஹாயாக ஷாப்பிங் – கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய கணவருக்கு விழுந்த தர்ம அடி!

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கர்வா சௌத் பண்டிகைக்கு தனது காதலியுடன் ஷாப்பிங் சென்றவரை கையும் களவுமாக பிடித்த மனைவி மார்க்கெட்டில் வைத்தே தர்ம அடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கர்வா சௌத் என்பது வட மற்றும் மேற்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகவும் பண்டிகை. அந்த நாளில் திருமணமான பெண்கள் விரதம் இருந்து தனது கணவனின் ஆயுள் மற்றும் நலனுக்காக பிரார்த்தனை ஏறெடுப்பர். கிருஷ்ண பக்ஷத்தின் நான்காவது நாள் அல்லது இந்து காலண்டர் மாதமான கார்த்திக் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு தன்னை ஆயத்தப்படுத்த தேவையான பொருட்களை வாங்கச்சென்ற ஒரு பெண்ணுக்கு கணவர் சிறந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
image
காசியாபாத்தைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு சில நாட்களாக பெற்றோருடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் வருகிற கர்வா சௌத் பண்டிகைக்காக தனது தாயாருடன் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது தனது கணவர் அவருடைய கேர்ள் ஃப்ரெண்டுடன் காசியாபாத்தின் பிஸி மார்க்கெட்டுக்கு ஷாப்பிங் வந்துள்ளார். அவரை அந்த இடத்திலேயே பிடித்த மனைவியும் உடனிருந்தவர்களும் அடித்து தாக்கியுள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற காதலியையும் அடித்து தாக்கியுள்ளார் அந்த பெண். இதற்கிடையே கடைக்குள் சண்டைபோடவேண்டாம் என விரட்டுகிறார் கடைக்காரர்.

करवा चौथ के दिन दूसरी महिला काे शॉपिंग करवाने आया था पति। पत्नी ने पकड़ा। https://t.co/T3jB1xVOWn pic.twitter.com/gSFGxGaghn
— Ankit tiwari/अंकित तिवारी (@ankitnbt) October 13, 2022

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நபரின் மனைவி கணவர்மீது காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.