சீனா விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்: ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்…


ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்ததால் பிரச்சினைக்குள்ளானோம், சீனா விடயத்திலும் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.

எரிவாயு விடயத்தில் ஜேர்மனி பெருமளவில் ரஷ்யாவை சார்ந்திருந்ததால் இப்போது அது சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்ததால் எரிவாயு விடயத்தில் பிரச்சினைக்குள்ளானோம், ஆகவே, சீனா விடயத்திலும் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்யாவிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம், நம்முடன் ஒத்தக் கருத்துக்கள் கொண்டிராத எந்த நாட்டையும் முழுமையாக சார்ந்திருக்கக்கூடாது என்பதுதான் என்று கூறியுள்ளார்.

சீனா விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்: ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்... | German Foreign Minister Urges

உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா எரிவாயு வழங்கல் விடயத்தில் பிரச்சினை உருவாக்கியுள்ளதால் ஜேர்மனி ஆற்றல் நெருக்கடியை சந்திக்கும் ஒரு நிலைக்குள்ளாகியுள்ளது.

சீனாவைப் பொருத்தவரை, அது ஜேர்மனியின் முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடாகும்., குறிப்பாக தானியங்கி தொழில்துறையில்…

சீனாவின் கடுமையான zero-Covid கொள்கை, தைவானுடனான பிரச்சினை மற்றும் Xinjiang பகுதியில் காணப்படும் மனித உரிமை பிரச்சினைகள் ஆகிய விடயங்களால் ஜேர்மனிக்கும் சீனாவுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வர்த்தக ரீதியில் அந்நாட்டை மட்டுமே நம்பியிருந்தால், ரஷ்யாவைப்போல சீனாவும் பிரச்சினை செய்தால் மீண்டும் ஒரு சிக்கலை ஜேர்மனி சந்திக்க நேரிடும்.

எனவேதான், வர்த்தக ரீதியில் அந்நாட்டை மட்டுமே நம்பியிருக்கக்கூடாது என ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.