தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 14) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் இளமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சென்னை
போரூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், லட்சுமி நகர், வர்ஷா நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
ஆவடியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக குளக்கரை தெரு, எட்டியம்மன் நகா் பாண்டீஸ்வரம், சத்தியா நகா், கரலபாக்கம், திருவள்ளுவா் தெரு, திருமலை நகா், கதவூா், வலச்சேரி, மேல கொண்டையூா் பட்டாபிராம், ஐயப்பன் நகா், வி.ஜி.வி நகா், கண்ணபாளையம், மேல்பாக்கம், வி.ஜி.என் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. அதன் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.