சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதன் பின்னணி என்ன என்பது குறித்து விவரங்களை தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முத்துமாலை ராணி என்பவர் ஓய்வூதிய பலன்களை வழங்க ஆணையிடக் கோரிய வழக்கில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.