புது டெல்லி: பட்ஜெட் விலையில் ரெட்மி நிறுவனம் ஏ1+ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் ரியல்மி, போக்கோ போன்ற நிறுவனங்களின் மலிவு விலை போன் விற்பனையில் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ஏ1+ போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 2ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ், 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போனை வந்துள்ளது.
- 3 வண்ணங்களில் கிடைக்கிறது.
- 6.52 இன்ச் திரை அளவு.
- ஹெச்.டி+ டாட் டிராப் டிஸ்பிளே.
- மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்.
- 8 மெகாபிக்சல் ட்யூயல் கேமரா பின்பக்கத்தில் உள்ளது.
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
- 5,000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது.
- டைப் சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது.
- 4ஜி இணைப்பில் இயங்கும். (இந்தியாவில் 5ஜி அறிமுகமாகி உள்ளது. இருந்தாலும் முன்னணி நிறுவனங்களின் 5ஜி சாதனங்களில் இன்னும் அதற்கான சப்போர்ட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
- இந்த போன் ரூ.6,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
- வரும் 17-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
Introducing the #StylishBhiSecureBhi #RedmiA1Plus.
Here are 10 reasons why this should be your next smartphone purchase.
What’s your reason to buy this stylish device? Let us know in the comments below.
https://t.co/5GwwhEqRNy pic.twitter.com/5hw6VraFuZ
— Redmi India (@RedmiIndia) October 14, 2022