வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கிராமத்தில் 18 வயது இளம் பெண் சித்தூர் மாவட்டம் ராமநாதபுரத்தில் ஸ்ரீ ராமுலு என்பவரின் மகனான சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் தாயார் சொத்து அதிகமாக இருப்பதை கண்டு மணமகன் குறித்து சரியாக விசாரிக்காமல் கூட பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அதன் பின் தான் மாப்பிள்ளை மனநலம் சரியில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பெண் வேறு வழியில்லாமல் திருமணம் ஆகிவிட்டதே என்று விதியை நினைத்து நொந்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இத்தகைய சூழலில், அந்தப் பெண் திடீரென காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், “மாமனார் எனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதை அவரிடம் நான் கேட்டபோது என்னுடைய தங்கை மற்றும் அம்மாவை கொன்று விடுவேன் என மிரட்டினார்.
இதனால், நான் பயந்து கொண்டு யாரிடமும் கூறவில்லை. இதை தனது சாதகமாக பயன்படுத்திக் கொண்ட என் மாமனார் அடிக்கடி என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதில் கர்ப்பமடைந்து, எனக்கு குழந்தையும் பிறந்தது. இப்போது, குழந்தை பிறந்த பின்னும் என்னை கொடுமைப்படுத்தி வருகின்றார்.” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.