திரைப்படத்தைப் போன்ற ஒரு சண்டை காட்சி உத்தரப்பிரதேசத்தின் காசியபாத் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த கடைவீதியில் நிகழ்ந்துள்ளது. ரகசிய காதலியுடன் தனியாக ஷாப்பிங் வந்த கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவியின் ஆக்ரோஷ சம்பவம்தான் அது.
அங்கிருந்தவர்கள் அவர்களின் சண்டையை வீடியோ எடுத்த நிலையில், அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபரின் சட்டையை பிடித்து, அவரின் மனைவியும், மனைவியின் சில தோழிகளும் அவரை பலமாக தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் அடிவாங்குவதை தடுப்பதற்கு குறுக்கே வந்தே காதலியையும் அவர்கள் தாக்கினர்.
‘ஓரமா போய் சண்டபோடுங்கப்பா…’
करवा चौथ के दिन दूसरी महिला काे शॉपिंग करवाने आया था पति। पत्नी ने पकड़ा। https://t.co/T3jB1xVOWn pic.twitter.com/gSFGxGaghn
— Ankit tiwari/अंकित तिवारी (@ankitnbt) October 13, 2022
மேலும், அத்தனை பேருக்கும் முன்னிலையில், அந்த பெண், கணவரையும், அவரின் காதலியையும் தனது செருப்பை கழட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சண்டையிடுவதை பார்த்த அந்த கடைக்காரர், வெளியே போய் சண்டை போடுங்கள் என துரத்தினார். அந்த பெண் தன் கணவன் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னதாக அந்த கணவன் – மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கர்வா சௌத் எனும் பண்டிகைக்காக அந்த பெண், தனது தாயாருடன் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்துள்ளார். கர்வா சௌத் எனும் இந்து மத பண்டிகை, நாட்டின் வட மற்றும் மேற்கு பகுதிகளில் பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், திருமணமான பெண்கள் விரதம் இருந்து, தனது கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள். அந்த நாளில்தான், அந்த நபர் தனது மனைவியிடம், ரகசிய காதலியுடன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.