மதுரை: எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது. கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கே நன்றாக தெரியும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.