காட்பாடி- திருவலம் சாலையை ரூ47 கோடியில் 4 வழியாக அகலப்படுத்தும் பணி ஆய்வு

வேலூர்: ரூ47 கோடியில் நடைபெற்று வரும் காட்பாடி-திருவலம் 4 வழியாக சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாநில நெடுஞ்சாலை கோட்டத்தின் கீழ் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 900 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காட்பாடி உட்கோட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாடு திட்டம் 2021-22ன் கீழ் காட்பாடி- திருவலம் சாலை ரூ47 கோடி செலவில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இப்பணியின் திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து சித்தூர்- திருத்தணி செல்லும் சாலையில் பொன்னையாற்றின் குறுக்கே ரூ35 கோடியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் 2021-22 காட்பாடி உட்கோட்டத்தில் நடந்து முடிந்த பணிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வேலூர் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி, தர கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் பூவரசன், அசோக்குமார், பூபதிராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.