புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது நிறுவன தின விழா நடந்தது.
மாணவர் பேரவை தலைவி சரிகா வரவேற்றார். நிறுவனத்தின் புல முதல்வர் செழியன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார்.
அதில், நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் குறித்தும், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
மேலும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடு சென்று பயிலும் வகையிலும், 6 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அரசு செயலர் குமார் கலந்து கொண்டு, நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற் றிய பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும், கலை, இலக் கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர் பேரவை பொதுச் செயலாளர் சாய்ராம் திவ்குஷ் தேசாய் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement