சண்டிகர் : ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் ஹரியானா சிறையில் உள்ள ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹிம் சிங், ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார்.
ஹரியானாவில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் , சிர்ஸாவில் உள்ள தனது ஆசிரமத்தில்இரு இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பஞ்ச்கோலா சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் 2017-ம் ஆண்டு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரோக்டக் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஹரியானாவில் உள்ள சுனோரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் பரோல் கோரிய நிலையில், அவருக்கு 40 நாட்கள் பரோல் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஆதாம்பூர் தொகுதிக்கு நவ. 3-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் சாமியார் பரோலில் வெளியே வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement