புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயன்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் இன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும்.
இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்.