சீரற்ற காலநிலையினால் திருகோணமலை கடல் பரப்பில் கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள மாலை நேர கடத்தொழில் ஈடுபடுபடவில்லை.
இதேவேளை,திருகோணாமலை மாவட்டத்தில் தற்பொழுது பலத்த மழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (14) மாலை ஆரம்பித்த மழை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
கிண்ணியா,மூதூர்,சம்பூர், முள்ளிப் பொத்தானை, தம்மலகமம், கந்தளாய், நிலாவெளி,குச்சவெளி, வெருகல், ஈச்சலம்பற்று முதலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
தாழ்நிலைப் பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதோடு அண்மையில் விதைக்கப்பட்ட வேளாண்மை வயல்களிலும் நீர் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாஞ்சோலை, மாஞ்சோலை சேனை, பெரிய கிண்ணியா, சின்ன கிண்ணியா முதலான பகுதிகளில் சில பகுதிகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றது.