பிராந்திய மொழிகளில் சட்டம் எழுதப்பட வேண்டும்: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் நடக்கும் சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

*மிகவும் பழமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்

*சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளுக்கு மாற்று வழிகள் கண்டறியப்படுவதுடன், நீதி கிடைப்பதை எளிதாக்க வேண்டும்

*பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் காலனித்துவத்தின் தடைகளை உடைப்பது நமக்கு முக்கியம். அதன் மூலம் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும்.

*காலாவதியான சமூக சட்டங்கள், முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதை அறிந்ததால், அதில் இருந்து நமது சமூகம் விடுபட்டுள்ளது.

நீதி வழங்குவதில் உள்ள தாமதம் மிகப்பெரிய தடையாக உள்ளது.

*சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும். அப்போது தான் ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் அதனை புரிந்து கொள்ள முடியும்.

*சட்டம் ஒழுங்கு சமூக முன்னேற்றத்துடன் ஒன்றாக ஒத்திசையும் போது, நீதி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும்

*இந்தியாவின் நீதித்துறையில் தொழில்நுட்பம் ஒரு அங்கமாக மாறியுள்ளது. காணொலி மூலம் விசாரணை உள்ளிட்ட சட்டசேவையில் உள்ள டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை 5ஜி சேவை பலப்படுத்தும். இவ்வாறு மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.