மீண்டும் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா லட்சுமி

வேகமாக வளர்ந்து வரும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்தார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தார். சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தை தயாரித்தார்.

தற்போது மீண்டும் குமாரி என்ற மலையாள படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது: மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது. தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று ஓடிடி தளத்தில் அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று 'குமாரி' என்ற மலையாள படமும் வெளியாகிறது. 'கார்கி' படத்தைத் தொடர்ந்து, 'குமாரி' படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். 'குமாரி' இதுவரை வெளிவராத ஜானர், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் படம்.

இதுதவிர நடிகை தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'கட்டா குஸ்திக், ப்ரியா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடிக்கும் படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் 'கிறிஸ்டோபர்க் எனும் படத்தில் மம்முட்டியின் மகளாகவும், 'கிங் ஆப் கோதாக் எனும் படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாகவும் நடித்து வருகிறேன். என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.