தெற்கு ஜீலோங்: ஆஸ்திரேலியாவில் டுவென்டி – 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. குரூப் ஏ பிரிவில் தகுதி சுற்றில், ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியும், நமீபியா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில், பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் நமீபியா அணி துடிப்பாக செயல்பட்டது. அந்த அணியின் பிரைலின்க் 44, ஸ்மீத் 31 ரன்கள் எடுத்தனர். அதேபோல், டேவிட் வியஸ் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும், ஷிகோங்கோ 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும், பெர்னார்ட் ஸ்கால்ட்ஜ் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு உதவினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அந்த அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் அணியை நமீபியா வீழ்த்துவது இது முதல் முறையாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement