புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் கூறுகையில், அனைத்து ஊழல் சாதனைகளையும் காங்கிரஸ் முறியடித்துள்ளது.
டில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி, கலால் துறையிலும், போக்குவரத்து துறைக்கு பஸ்கள் வாங்குவதிலும், கழிப்பறைகள் கட்டுவதிலும் ஊழல் செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஊழல்களின் கட்சியாக மாறியுள்ளது.
டில்லியில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் ஆட்சி அமைத்த பிறகு எல்லா இடத்திலும் மதுக்கடைகளை திறந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement