சென்னையில் மது போதையில் கார் ஓட்டி வந்த காதல் ஜோடியை பிடித்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, அந்த வழியாக ஒரு கார் பயணித்தது. அந்த காரில் ஒரு இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் பயணித்து வந்தனர்.
ஆண் நண்பர் காரை ஓட்டி வந்த நிலையில் அவரை பரிசோதித்த போது அந்த ஆண் நண்பர் குடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பெண்ணையும் சோதனை செய்தனர் அவரும் குடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்ற போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவர்கள் குடித்திருந்த காரணத்தால் வாகனத்தை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
எனவே ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று இருக்கிறார். அவர்கள் இருவரும் சண்டையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகின்றது.