திராவிட மாடலின் மூன்று வேஷங்கள்… கிருஷ்ணசாமி போட்டு உடைச்ச சீக்ரெட்!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும்

இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. இதற்கான விதை 30களிலேயே போடப்பட்டு விட்டது. இதன் பாதை நீதிக்கட்சி, திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என நீண்டு கொண்டே செல்கிறது. பெரியார் தொடங்கி

வரை இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது பிரதானமாக இருந்து கொண்டிருக்கிறது.

நேற்று கூட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி தலைமையில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஷயம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது, ரெட் ஜெயண்ட் என்ற ஆங்கிலப் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது திமுக.

தமிழகத்தில் ‘லால் சிங் சத்தா’ என்ற இந்திப் படம் வெளியான போது, அதில் லாபம் ஈட்ட முதலீடு செய்து படத்தை வெளியிட்டது. இப்படியிருக்கையில் ஊரை ஏமாற்றுவதற்காக இந்தி திணிப்பு – எதிர்ப்பு என அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இவையெல்லாம் மாடல் வடிவத்தின் மூன்று வேடங்கள் எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

பலரும் பதில் கருத்து பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். அதாவது, முதல்வர் தூக்கமின்றி தவிப்பதாக புலம்பியது வைரலானது. இதனை திசை திருப்பவும், மின்சாரம், சொத்து வரி உயர்வு, மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறையின் திறனற்ற திட்டமிடல்களால் முடங்கிப் போய் கிடக்கும் பணிகள் மீதான கவனத்தை திசை மாற்றம் செய்யவும், இப்படி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அரங்கேற்றியுள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நன்றாக கதறுங்கள் எனக் கூறி #இந்தி_படிப்போம்_போடா என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசியல் சாணக்கியர், எதிர்காலத்தை கணிக்கும் வல்லமை கொண்ட டாக்டர் எனப் புகழாரம் சூட்டியுள்ளனர். அவர்கள் இந்தி படம் எடுப்பார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பார்கள். அவர்கள் இந்தியில் பேசுவார்கள். ஆனால் மற்றவர்கள் இந்தி படிக்கக் கூடாது. பேசக் கூடாது.

இதுதான் திராவிட மாடல் என புதிய தமிழக கட்சி மாநில துணைச் செயலாளர் நெல்லை சிவக்குமார் பதிவிட்டுள்ளார். சிலர் திமுகவிற்கு கூடிய கூட்டத்தை விமர்சனம் செய்துள்ளனர். அதேசமயம் பதிலடிகளும் கூடவே வந்துள்ளன. லால் சிங் சத்தா திரைப்படம் இந்தி மொழியில் இங்கு வரவில்லை. அது தமிழில் டப்பிங் செய்து வெளிவந்தது என்றும், கற்பது என்பது வேறு. திணிப்பு என்பது வேறு. அதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.