ராமதாஸ் செம டென்ஷன்; பக்கா ப்ளானை இறக்கும் பாமக!

பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் பல்லாண்டு கால ஆசை நிறைவேறி இருக்கிறது. ஆம்,

தலைவராக அன்புமணி

பொறுப்பேற்று சுமார் 5 மாதங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை மறு சீரமைப்பு செய்யும் விதமாக கிராமம் கிராமமாக நடைபயணம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என

சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செல்லும் இடங்களில் எல்லாம் வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும் என்றும் அதற்காக வியூகங்கள் அமைப்போம் என்று கூறி அன்புமணி ராமதாஸ் தொண்டர்களை தெம்பூட்டி வருகிறார்.

இது, பாமகவுக்கு ஓரளவுக்கு கை கொடுத்து வருவதாகவே கூறப்படும் நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் பாமகவை ஃபார்முக்கு கொண்டு வருவது என்பதுதான் தைலாபுரம் தோட்டத்து ப்ளான்.

ஆனாலும் அன்புமணியின் தலைமையை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியின் இணைய பெரிய அளவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ராமதாஸ் ஏகத்துக்கும் வருத்தம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி அன்புமணி ராமதாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பாமக தலைவராக பொறுப்பேற்றதற்கு பின்னர், வரும் பிறந்தநாள் என்பதால் கொண்டாட்டம் பலமாக இருக்க வேண்டும் என்று கட்சி முன்னணி நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவு போட்டு இருந்தார்.

டாக்டர் ராமதாஸ் உத்தரவு போட்டும் ஒரு சில இடங்களில் மட்டும் சிறு சிறு நிகழ்ச்சி நடத்தப்பட்டதே தவிர அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை கொண்டாடும் அளவுக்கு நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை அழைத்து விசாரித்தபோது, ‘கை செலவுக்கே காசு இல்லாமல் தவிக்கிறோம். நாங்க எங்கிருந்து பணம் புரட்டி விழா நடத்துறது? நாங்களா கோடிக்கணக்கில் வச்சிகிட்டு கஞ்சத்தனம் செய்றோம்?’ என எதிர்கேள்வி கேட்டு மடக்கியிருக்கின்றனர்.

இதைக்கேட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் டென்ஷன் ஆன நிலையில் பணம் செலவழிக்க தகுதியான நிர்வாகிகளை இப்போதே போட்டால் தான் தேர்தலில் ஓரளவுக்கு கை கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இதன்படி கட்சி பணியில் தொய்வு காட்டும் நிர்வாகிகள் மற்றும் பணம் செலவழிக்க தயங்கும் பொறுப்பாளர்கள் போன்றவர்களை ஓரங்கட்டி விட்டு, புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு அதிரடி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறி தோட்டத்து வட்டாரத்தில் உள்ளவர்கள் தெறிக்கவிடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.