போபால்:நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம்.
இதற்காக, மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஹிந்தி மொழியில் பாடம் கற்பிக்க ம.பி., அரசு திட்டமிட்டது. ஹிந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க கடந்த பிப்ரவரியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மொழி வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர்.
மருத்துவப் படிப்புக்கான ஹிந்தி மொழி புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிடுகிறார். முதலாம் ஆண்டில் ஹிந்தியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பை ஹிந்தியிலேயே தொடருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கற்பிக்கப்படும் மொழி ஹிந்தியாக இருந்தாலும், முக்கியமான கலைச்சொற்கள் ஆங்கிலமாகவே இருக்கும்.
மாநிலத்தில் உள்ள 13 மருத்துவக் கல்லுாரிகளிலும் இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஹிந்தி மொழியிலும் கற்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement