75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என  2022-23- மத்திய பட்ஜெட் உரையில்,  நிதியமைச்சர் அறிவித்திருந்தார். டிஜிட்டல் வங்கி சேவையின் பயன்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலைமுடுக்கையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டு இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்படுகிறது.
11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இதில் பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாங்கள் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய விஷயங்களை வேலை செய்துள்ளோம். முதலாவதாக வங்கி அமைப்பை மேம்படுத்துதல் அதை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்படத் தன்மையை கொண்டு வருதல். இரண்டாவதாக நாங்கள் அதிக நிதியை சேர்த்துள்ளோம்.

image
பின் தங்கிய மக்களுக்கு சேவை செய்வதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல அரசாங்கம் முன் முயற்சி எடுத்துள்ளது. நாம் முதலில் ஏழைகள் மற்றும் வங்கிகளுக்கான தூரத்தை குறைக்க வேண்டும். உடல் தூரத்தையும், உளவியல் தூரத்தையும் குறைத்தோம். பெரிய தடையாகவும் தொலைதூரப் பகுதிகளுக்கு வங்கிகளை கொண்டு செல்வதற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளித்தோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், இன்று தொடங்கப்பட்ட சேவைகள் மூலம் வலுவான டிஜிட்டல் வங்கி பாதுகாப்பாக இருக்கும். நேரடி பணபரிமாற்றம் மூலம் அரசு இதுவரை ரூ.25 லட்சம் கோடியை மாற்றி உள்ளது. பிரதமரின் கிசானின் மற்றொரு தவணைத்தொகை நாளை மாற்றப்படும். ஜெர்மனி, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை காட்டிலும் நமது நாட்டில் உள்ள வங்கிகளை எண்ணிக்கை அதிகம். சாதாரண மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இரவு பகலாக அரசு உழைத்து வருகிறது என்றார்.

இதையும் படிக்க: உலக பசி குறியீட்டு தரவரிசை: ‘நாட்டின் மதிப்பை கெடுக்க முயற்சி’ – இந்தியா கண்டனம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.