டெல்லி: டெல்லியில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் கே.எஸ். அழகிரி, புதுச்சேரியில் நாராயணசாமி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தனர். வேட்பாளர்களான மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவிலும், சசி தரூர் கேரளாவிலும் வாக்களித்தனர்.
