லக்னோ :ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு, அசதியில் பள்ளி பஸ்சுக்குள் ஏறி படுத்து ஓய்வெடுத்தது. வனத்துறையினர் அதை பாதுகாப்பாக துாக்கிச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பஸ், அதே பகுதியில் உள்ள கிராமத்தின் சாலையோரம் நேற்று முன்தினம் நிறுத்தி வைப்பட்டிருந்தது.
அதற்கு அருகில் உள்ள புதரில் இருந்த மலைப்பாம்பு, கிராமத்திற்குள் புகுந்து முழு ஆட்டை விழுங்கியது. பின் மீண்டும் புதருக்கு ஊர்ந்து வரத் துவங்கியது. ஆனால், பள்ளி பஸ் அருகே வந்த போது சோர்வாக உணர்ந்துள்ளது.
உடனே பஸ்சுக்குள் ஏறி ஓய்வெடுக்கத் துவங்கியது. சற்று நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த சிலர், பஸ்சுக்குள் நீளமாக ஒரு மலைப்பாம்பு படுத்திருப்பதை பார்த்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், 80 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து துாக்கிச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement