கேட் மற்றும் வில்லியமின் ஆரம்ப கால காதல் நாட்கள்: முன்னால் ராயல் சேவகர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!


காதலர்களாக ஆவதற்கு முன்பு நல்ல நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் வழக்கமான காதலன் மற்றும் காதலியை போன்றே இருந்தனர்.

இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டனின் ஆரம்ப கால காதல் உறவுகள், மற்றவர்களிடம் இருந்து எந்தவொரு வித்தியாசமும் கொண்டது இல்லை என ராயல் butler  கிராண்ட் ஹரோல்ட் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரிடம் ஏழு ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன்னால் ராயல் butler  கிராண்ட் ஹரோல்ட், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் காதல் உறவின்  மூடி வைக்கப்பட்ட பக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கேட் மற்றும் வில்லியமின் ஆரம்ப கால காதல் நாட்கள்: முன்னால் ராயல் சேவகர் வெளிப்படுத்தியுள்ள உண்மை! | Royal Butler Reveals Kate And Prince William LoveAFP/Getty Images

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி இருவருக்கும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த போது மலர்ந்த அவர்களுடைய காதல், ஆரம்ப நாட்களில் இருந்தே அரச பார்வையாளர்களை வசீகரித்தது.

19 வயது இளைஞர்களாக அவர்களது உறவு, காதலாக மாறுவதற்கு முன்பு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
ஆனால் இப்போது மூன்று குழந்தைகளைக் கொண்ட காதல் ஜோடி, அவர்களது காதல் காலத்தில் அனைத்து காதலன் மற்றும் காதலி-யை போன்றே இருந்தனர் என ராயல் butler  கிராண்ட் ஹரோல்ட் தெரிவித்துள்ளார்.

கேட் மற்றும் வில்லியமின் ஆரம்ப கால காதல் நாட்கள்: முன்னால் ராயல் சேவகர் வெளிப்படுத்தியுள்ள உண்மை! | Royal Butler Reveals Kate And Prince William LoveSusie Mackie

நீங்கள் அவர்கள் யார் என்று நினைத்து பார்க்கும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும் ஆனால், அவர்கள் மற்ற காதலர்கள் யாரை விடவும் வித்தியாசமாக இல்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இளவரசி கேட்-யிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், அவர் இளவரசருக்கு காதலியாக இருக்கும் போது என்னிடமும், மற்ற ஊழியர்களிடமும் மிகவும் கண்ணியமாகவும், நட்பாகவும், வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருந்தார் என தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானிய பெண்ணை பன்றி வேட்டையின் போது கொன்ற சக தோழர்: பிரான்சில் அரங்கேறிய சோகம்!

கேட் மற்றும் வில்லியமின் ஆரம்ப கால காதல் நாட்கள்: முன்னால் ராயல் சேவகர் வெளிப்படுத்தியுள்ள உண்மை! | Royal Butler Reveals Kate And Prince William LoveGetty Images

அத்துடன் இளவரசர் வில்லியம், கேட் மற்றும் இளவரசர் ஹரியை கவனித்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அது வேடிக்கையாக இருந்தது, ஏனென்றால் நான் அவர்களை எனது கடமையில் இருந்து அறிந்தது மட்டுமல்லாமல், கடமைகளின் வெளியே இருந்து நல்ல நண்பராகவும் அவர்களைப் பற்றி அறிந்தேன் என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.