கோல்கட்டா மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் வீடு மற்றும் காரில் இருந்து, 8 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர தொழிலதிபர்கள் சைலேஷ் பாண்டே, அரவிந்த் பாண்டே ஆகியோர் வங்கியில் வழக்கத்துக்கு மாறாக அதிக தொகை பரிவர்த்தனை செய்ததாக, வங்கி அதிகாரிகள் போலீசிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கோல்கட்டாவின் ஷிப்பூர் என்ற இடத்தில் உள்ள அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, படுக்கை உள்ளே கட்டு கட்டாக பதுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் மொத்தம் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையின் போது தொழிலதிபர்களின் குடும்பத்தினர் ஒருவரும் வீட்டில் இல்லை. தலைமறைவாக உள்ள தொழிலதிபர்கள் சைலேஷ் மற்றும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement