திமுகவுடன் தொடர்பு… சிவி சண்முகத்தை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் அதிமுக OPS அணி சார்பில் கட்சியின் 51 ஆம் ஆண்டு துவக்க விழா, மருத்துவர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக

அணி விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்பியுமான சேவல் ஏழுமலை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ” அதிமுக எடப்பாடி அணியில் உள்ள சிவி.சண்முகத்தின் ஆட்கள் திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு எங்களை துரோகி என்று கூறி வருகிறார்கள்.

மேலும் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சி.வி சண்முகம் செஞ்சி பகுதியில் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. செஞ்சிப் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைத்து தர கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதை நிராகரித்துவிட்டார்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும்

அரசை கண்டிக்காமல் குறிப்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானை கண்டிக்காமல், அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு திமுகவிற்கு துணைபோகும் முதல் நபரே சி.வி சண்முகம் தான்” என்று சேவல் ஏழுமலை பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மருத்துவர் அணி இணை செயலாளர் யோகேஸ்வரன், “தமிழகத்தில் கடந்த 15 மாதங்களாக கொடூரமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் சாபங்களை வாங்கி கொண்டு இருக்கிறது திமுக அரசு.

முதுகெலும்பு இல்லாத நபர் தான் சி.வி சண்முகம். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரால் கட்சியில் பதவி மற்றும் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு இன்று கருவாடு மீன் ஆகாது என்று இவர் வீரவசனம் பேசி வருகிறார்” என்று யோகேஸ்வரன் கடுமையாக சாடி உள்ளார்.

திமுக அரசை பாராட்டி பேசிவரும் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்கு அதிமுகவை பற்றி பேச எவ்வித உரிமையோ, தகுதியோ இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான சிவி சண்முகம் பேசிவரும் நிலையில். அவருக்கு பதிலடியாக ஓபிஎஸ் ஆதரவாளர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.