
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருந்தார்.
இவர் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். பஸ்தார் பகுதியில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த முக்கிய தலைவராக விளங்கிய மனோஜ் சிங் கடந்த 2000-2003 வரை அஜித் ஜோகி அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
58 வயதாகும் மனோஜ் சின்ஹா மந்தவிக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர் தம்தரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனோஜ் சின்ஹா நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவு அம்மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற சபாநாயகர் சரண்தாஸ் மகந்த், முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் காங்கிரஸ்,பாஜ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மனோஜ் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.