பொதுவாக பருவநிலை மாறுவதால் பொதுவாக உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தினசரி ஏற்படும் வானிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.
அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சில எளிய பானங்கள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

- இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொள்ளவும். துளசி இலைகளை சுத்தமாக கழுவி வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது துருவிய இஞ்சி மற்றும் இலைகளை சேர்க்கவும். கொதித்த உடன் இறக்கி வடிகட்டி குடிக்கவும். தேவையெனில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
- ஏலக்காய், கருப்பு மிளகு, பெருஞ்சீரக விதைகள் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் இடித்து வைக்கவும். பாத்திரத்தில் பால் விட்டு அதில் தேயிலை பொடி மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். பிறகு இடித்த இந்த பொடியை சேர்த்து அவை நன்றாக கொதித்ததும் வடிகட்டி அதில் வெல்லம் சேர்த்து குடிக்கவும். வெல்லத்தின் சுவை கலந்து தேநீர் ருசியாக இருக்கும்.
- ஏலக்காய் – 1
கிராம்பு – 1
இலவங்கப்பட்டை – சிறிய அளவு
மிளகுத்தூள்- தேவைக்கு
பெருஞ்சீரகம் – தேவைக்கு
இவை அனைத்தையும் நசுக்கி கொள்ளவும்.
இஞ்சி- தேவைக்கு
தேயிலை தூள் – தேவைக்கு
பால் – 2 டம்ளர்
சர்க்கரை – தேவைக்கு இவற்றை தண்ணீர் மற்றும் பால் சேர்த்து தேயிலை பொடி சேர்த்து கொதிக்க விடவும். பிறகு மசாலா பொருள்களை போட்டு வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும். சிறிது ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை எடுத்து நசுக்கி விடவும். இதை கொதிக்கும் நீரில் சேர்த்து ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ இலைகள் சேர்த்து 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு தேநீரை வடிகட்டி பாதாம் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்க்கவும். சுவையான குங்குமப்பூ தேநீர் தயார்.