பிரதமர் அர்ப்பணித்த 75 டிஜிட்டல் வங்கிகள்… மக்களுக்கு என்ன பயன்?

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் அமைக்கப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75 நகரங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளைத் தொடங்கி வைத்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. வங்கிகள் எப்படி செயல்படுகின்றதோ அதைப் பொருத்துதான் நாட்டின் நிதியியல் நிலை இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரமும் சீராக இருக்கும். சமீபத்தில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் கூட உலகப் பொருளாதாரத்தில் வங்கித் துறையின் முக்கியத்துவம் குறித்த ஆய்வுக்குதான் வழங்கப்பட்டது.

டிஜிட்டல் பேங்கிங்

இந்நிலையில் வளர்ந்துவரும் நவீன உலகுக்கு ஏற்ப தேவையைப் பூர்த்தி செய்யும் உட்கட்டமைப்புகள் அவசியமாக உள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, டிஜிட்டல் பேங்கிங் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு டிஜிட்டல் வங்கிக் கிளைகளைத் தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தது.

டிஜிட்டல் வங்கிக் கிளைகளைத் தொடங்கிவைத்து போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி “நாட்டு மக்களுக்கு சிறந்த வங்கிச் சேவையை வழங்கும் விதமாக டிஜிட்டல் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மக்களின் வங்கி அனுபவம் மேம்படும். மக்கள் அனைவரும் நிதி சேர்கைக்குள் வர வழிவகுக்கும்” என்று கூறினார்.

இந்திய வணிக வங்கிகள் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் 75 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து 75 டிஜிட்டல் வங்கிகளை நிறுவியிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த டிஜிட்டல் வங்கிக் கிளைகளில் அடிப்படையான அனைத்து வங்கி சேவைகளும் வழங்கப்படும். பணம் வைப்பு வைப்பதிலிருந்து, கடன் சேவைகள் வரை என அனைத்தும் அதில் அடங்கும்.

ஏற்கெனவே ஏடிஎம்களில், பாஸ்புக் அச்சடிப்பதிலிருந்து, பணம் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது, இஎம்ஐ கட்டுவது, மொபைல் எண்ணை மாற்றுவது என பல சேவைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் இந்த டிஜிட்டல் வங்கி கிளைகளில் மேலும் கூடுதல் வங்கி சேவைகள் இடம்பெறும்.

இந்த டிஜிட்டல் வங்கிக் கிளைகளில் நடப்புக் கணக்கு, சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு ஆகிய அனைத்து கணக்குகளுக்குமான சேவைகள் கிடைக்கும்.

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை

வங்கிக் கணக்கு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஆதார் எண், பான் எண் ஆகிய மூன்றும் இருந்தால் போதும் டிஜிட்டல் வங்கிக் கிளைகளில் வங்கி சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.