பெரும்பாலான முதலிரவில் முழுமையான உறவு நிகழ்வதில்லை; காரணங்களும் தீர்வுகளும்! #VisualStory

முதலிரவில் முழுமையான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லையென்றால், அது குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் பலர் மிகவும் அச்சம், சோர்வு கொள்கிறார்கள்.

Marriage

பெற்றோர் செய்து வைத்த திருமணம் என்றாலும், காதல் திருமணமாக இருந்தாலும், இளம் தம்பதி ஆர்வத்துடன் காத்திருப்பது முதலிரவுக்காகத்தான். முதலிரவுக்காகவும், முதல் உறவுக்காகவும் ஏங்குவதே மனித இயல்பு. இப்படி நிகழ்ந்தால் இயல்பாக இருக்கிறார்கள் என அர்த்தம்.

love couple

ஆனால், திருமணமான அனைத்து தம்பதிகளுக்குமே, முதலிரவு முழுமையாக நிகழ்ந்திருக்கும், தாம்பத்திய உறவு சக்சஸ்ஃபுல்லாக நிறைவுற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அதென்ன `சக்சஸ்ஃபுல்’ என்கிறீர்களா?

`டீப் பெனட்ரேஷன்’ உடன் தாம்பத்ய உறவு நிகழ்ந்தால் மட்டுமே சக்சஸ்ஃபுல்லாக உறவு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

Woman in distress

ஆனால் 95 சதவிகித முதலிரவுகள், அப்படி முடிவதில்லை. தொடர்ந்து ஒரு வாரம் முயன்றால், இவர்கள் முழுமையான தாம்பத்ய உறவை அனுபவித்துவிடுவார்கள்.

முதலிரவு முழுமை அடையாததற்கான முதல் காரணம், முதன்முறையாக உறவு கொள்கிற பெண்ணுறுப்பின் உறவுப்பாதை ஒரு விரல் சுற்றளவு மட்டுமே இருக்கும். திருமணமான புதிதில் அந்த அளவுக்கு இறுக்கமாகத்தான் இருக்கும். உறவுப்பாதை எலாஸ்டிக் தன்மை கொண்டது என்பதால், இயல்பான இந்த இறுக்கம் போகப் போக சுலபமாகச் சரியாகிவிடும்.

Representational Image

இரண்டாவது, தாம்பத்ய உறவுபற்றிய நாலெட்ஜ் இல்லாதவர்கள், `மொத தடவை கடுமையா வலிக்கும், கொஞ்சம் ரத்தம் வரும், பல்லைக் கடிச்சிட்டு பொறுத்துக்கணும்’ என்று இளம் பெண்களை பயமுறுத்தி விடுவார்கள். இந்த பயத்துடனே பெண்கள் முதலுறவில் ஈடுபடுவார்கள்.

Representational Image

விளைவு, அவர்களுடைய பெண்ணுறுப்பு இறுகி, சுவர்போல் நின்று தாம்பத்திய உறவைத் தடுத்துவிடும். இதன் காரணமாக உறவில் ஈடுபட முடியவில்லை எனில், உடனே அதற்கான நிபுணரைச் சந்தித்துவிடுங்கள். ஒரே வாரத்தில் பிரச்னை சரியாகிவிடும்.

Adolescent boys and girls

தன்னால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை என்பது ஓர் ஆணுக்கு எப்போது முதன்முதலாகத் தெரியும் தெரியுமா? முதலிரவு அறையில்தான். அது சம்பந்தப்பட்ட ஆணுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்தும் முழுமையான உறவு நிகழவில்லையென்றால், பதற்றம், பயம், தூக்கமின்மை என்று தவித்துப்போவார்கள் ஆண்கள்.

மனைவியைப் பார்த்தாலே பயப்படுவார்கள். இரவு வந்தாலே, `ஆபீஸ் வேலையிருக்கு’, ’ஃபிரெண்டை பார்க்கப்போறேன்’, தலை வலிக்குது’ என்று உறவைத் தவிர்க்க காரணம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

Representational Image

சில மனைவிகள், `டாக்டர், செக்ஸ் கூட வேண்டாம்… இவர் பக்கத்துல வந்து உட்கார்ந்தா போதும்; கையைப் பிடிச்சுக்கிட்டா போதும்’ என்பார்கள். ஆனால், அவர்களுக்குள் இருக்கிற பதற்றம் காரணமாகச் சம்பந்தப்பட்ட ஆண்களால் இதைக்கூட செய்ய முடியாது.

மருத்துவர்

இது மருத்துவரீதியிலான பிரச்னை மட்டுமே. இதில் ஆணுடைய குற்றம் எதுவுமில்லை. இந்தப் பிரச்னை சரிசெய்யக் கூடியது என்றால், ஒரே வாரத்தில் சரி செய்துவிடலாம். ஒருமுறை சரி செய்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்கும் மகிழ்ச்சியாகத் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.