புதுடெல்லி: பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை காஷ்மீருக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டும் அதே போல வீரர்களுடன் தீபாவளி கொண்டாட பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, வரும் 21ம் தேதி கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அதே நாளில் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். பின்னர் 23ம் தேதி உபி.யின் அயோத்தியில் நடக்கும் பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 24ம் தேதி தீபாவளி தினத்தில் காஷ்மீர் சென்று ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார்.