
ராஜமவுலி படத்தில் இணையும் கார்த்தி
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறாராம். இந்த படத்தில் நாயகனாக மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது கார்த்தியும் அப்படத்தில் இணைவது கூறப்படுகிறது. அதோடு பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் இதில் நடிக்கிறாராம். இதற்கு முன்பு தோழா உள்ளிட்ட சில படங்கள் கார்த்தி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளன. அதோடு கார்த்தி நடிக்கும் தமிழ் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.