புதுடெல்லி: கிங் பிஷர், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, மற்றும் யெஸ் பேங்க் போன்ற பல்வேறு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடிகளில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றும் கோரி பாஜ தலைவர் சுப்ரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் மற்றும் பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வானது, ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விசாரிக்க கோரும் மனு தொடர்பாக பிசிஐ மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.