ஐதராபாத்: ஸ்ரீகார்த்தி இயக்கத்தில் தெலுங்கில் ‘ஒகே ஒக்க ஜீவிதம்’ என்ற பெயரிலும், தமிழில் ‘கணம்’ என்ற பெயரிலும் திரைக்கு வந்த 2 படங்களிலும் சர்வானந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த இப்படத்தில் ரீது வர்மா ஹீரோயினாகவும், அம்மா கேரக்டரில் நாகார்ஜூனாவின் மனைவி அமலாவும் நடித்திருந்தனர். இப்படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், வரும் 20ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்படுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.