தொண்டர்கள் துணை நின்றால் போதும் அதிமுகவை ஒன்றிணைப்பேன் – சசிகலா பேச்சு

அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கறேன் என சசிகலா தெரிவித்தார்.
அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்துக்கு வந்த சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக விழாவில் பேசிய சசிகலா… திமுக எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட கட்சி. கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ததே எம்.ஜி.ஆர் தான், ஆனால், அவரையே கட்சியை விட்டு நீக்கியவர் கருணாநிதி.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் ஜெ.அணி, ஜா.அணி என பிரிந்து இருந்த போதும் சேர்ந்த போதும் ஒரு நாளும் ஜெ.அணி, ஜா.அணி என பிரித்து பேசியது கிடையாது. அதிமுக என தான் சொன்னோம். இப்பவும் அதையே தான் சொல்கிறேன்
அப்பவே இரு அணிகளையும் இணைத்த என்னால் இப்ப செய்ய முடியாதா? நிச்சயமாக செய்ய முடியும். அதை நிச்சயம் செய்து காட்டுவேன். எப்ப செய்யணும் எப்படி செய்யணும் என எனக்குத் தெரியும். அதை என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு துணை இருந்தால் போதும்.
image
ஜாதி மதம் மொழி வைத்து மக்களை அச்சுறுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது தான் திமுகவின் கொள்கை. திமுக முன்னெடுக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் இளைய சமுதாயத்தினர் பங்கேற்க வேண்டாம்.
மக்கள் கேட்காமலே பல கவர்ச்சியான வாக்குறுதிகளை கொடுத்த திமுக, இன்று எதையும் நிறைவேற்றவில்லை. திமுக நடத்தும் இந்தி போராட்டத்தில் எல்லாம் இளைஞர்கள் பங்கேற்க வேண்டாம். இளைய சமுதாயம் படிக்க வேண்டும். படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
image
திமுகவை போல பிரிவினை வாதம் பண்ணாமல் தமிழ் பேசும் அனைவரையும் ஒருகுலம் என்ற அடிப்படையில் நல்ல பல திட்டங்கள் கொண்டு வந்தது அதிமுக. தமிழ் தமிழ் என சொல்லி இலங்கை மக்களுக்கு திமுக செய்த துரோகத்துக்கு பிராயசித்தமாக தனி ஈழம் தீர்மானம் கொண்டு வந்தது அதிமுக என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.