டெல்லி,
நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் தொடர்பை தகர்க்க இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :