முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம்

மாணவிகளை கொடூரமாத தாக்கிய பொலிசார், அவர்களை பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஹிஜாப் முறையாக அணியாத விவகாரத்தில் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு Mahsa Amini மரணம்

ஈரானில் உச்ச தலைவருக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த பள்ளி மாணவியை சிறப்பு பொலிசார் அடித்தே கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை வாழ்த்தி ஆதரவாளர்களால் பாடப்படும் பாடலையே குறித்த மாணவி பாட மறுத்துள்ளார்.
வியாழன் அன்று ஷாஹித் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம் | Iranian Schoolgirl Refusing Beaten To Death

திடீரென்று பள்ளிக்குள் நுழைந்த சிறப்பு பொலிசார், அங்குள்ள மாணவர்களை தொடர்புடைய பாடலை பாட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால் 16 வயது Asra Panahi என்ற மாணவி உட்பட சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த மாணவிகளை கொடூரமாத தாக்கிய பொலிசார், அவர்களை பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், காயங்கள் காரணமாக Asra Panahi சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம் | Iranian Schoolgirl Refusing Beaten To Death

@getty

ஏற்கனவே ஹிஜாப் முறையாக அணியாத விவகாரத்தில் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு 22 வயது Mahsa Amini மரணமடைந்த நிலையில், 5 வாரமாக ஈரானில் போராட்டங்கள் நீடித்து வருகிறது.

தற்போது பொலிசாரின் கொடூரத்திற்கு Asra Panahi என்ற மாணவியும் மரணமடைந்துள்ளது பொதுமக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஈரானிய அதிகாரிகள் Asra Panahi மரணத்திற்கு பொறுப்பேற்க மறுத்துள்ளதுடன், அவரது உறவினர்களை தூண்டிவிட்டு, Asra Panahi மாரடைப்பால் இறந்ததாக கூற வைத்துள்ளனர்.

முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம் | Iranian Schoolgirl Refusing Beaten To Death

@AP

ஈரானில் கடந்த 5 வாரங்களாக நீடித்துவரும் போராட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே பெருந்திரளாக பங்கேற்று வருகின்றனர்.
இவர்களே தங்கள் ஹிஜாப் உடைகளை தீயிட்டு ஈரானிய நிர்வாகத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

இதனையடுத்தே, சிறப்பு பொலிசார் பாடசாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு, ஆட்சிக்கு ஆதரவான நிலையை உருவாக்க முயன்று வருகின்றனர். 

முடியாது என மறுத்த பள்ளி மாணவி.. அடித்தே கொன்ற அதிகாரிகள்: பதறவைக்கும் சம்பவம் | Iranian Schoolgirl Refusing Beaten To Death

@getty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.