அமராவதி: ஆந்திரா அதோனியில் உள்ள ஸ்ரீ கங்கா பவானி கோயிலுக்கு, சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் சாமி தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், ‘ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரிலான நடை பயணத்தை காங்., – எம்.பி., ராகுல் சமீபத்தில் துவக்கினார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாதையாத்திரையை துவங்கிய ராகுல், கேரளா, கர்நாடகாவை கடந்து நேற்று ஆந்திராவிற்குள் வந்தார். கர்நூல் மாவட்டத்தில், காங்., தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, 42வது நாளான, இன்று(அக்.,19) ஆந்திராவில் விஜய நகரம் மாவட்டத்தில் சாகி கிராமம் முதல் பனவாசி கிராமம் வரை ராகுல் காங்., தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் ஆந்திரா அதோனியில் உள்ள ஸ்ரீ கங்கா பவானி கோயிலுக்கு, சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் சாமி தரிசனம் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement