காந்தாரா பார்த்தால் ஹார்ட் அட்டாக் வரும்… ராம்கோபால் வர்மா

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி காந்தாரா தமிழில் டப் செய்யப்பட்டும் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பை படத்துக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரமிப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும்வருகின்றனர். மேலும், நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதையையும் பலர் பாராட்டிவருகின்றனர்.

அந்தவகையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிக பட்ஜெட் படங்கள்தான் மக்களை திரையரங்குக்குள் இழுக்கும் என்ற மூட நம்பிக்கையை ரிஷப் ஷெட்டி உடைத்திருக்கிறார். காந்தாரா அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.காந்தாரா படத்தின் வசூலால் 200 கோடி, 300 கோடி, 500 கோடி ரூபாய் பட்ஜெட் இயக்குநர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது. பாடம் சொல்லிக்கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு சினிமா உலகத்தினர் ட்யூஷன் கட்டணம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக, இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்கில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் இருந்தது. அதாவது, ஐஎம்டிபியில் ‘ஜெய்பீம்’ படத்தின் ரேட்டிங் 8.9. இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங் பெற்ற படமாக அந்தப் படம் கருதப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 8.4 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. அடுத்ததாக ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 8 ரேட்டிங்கில் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்குடன் முதலிடம் பிடித்துள்ளது காந்தாரா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.